கடந்த 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்வதேச ஒரு நாள் உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. இதன்போது நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்து களத்தடுப்பினை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 274 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 275 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிப்பெற்றது.
இதன்போது சில தவறுகள் நடந்ததாகவும் அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் கொடுப்பதற்கு தனது டிவிட்டர் பக்கத்தில் முன்னாள் ஜாம்பவான்களான குமார் சங்ககார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சங்ககார தெரிவித்ததாவது "முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தனது" ஆதாரங்களை "ஐ.சி.சி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு எடுத்துச் செல்ல வேண்டும், எனவே கூற்றுக்களை முழுமையாக விசாரிக்க முடியும்.
இதுபோன்ற ஒரு சாதாரணமான விடயத்தில் இந்த தீவிரமான ஒன்றைப் பற்றித் திறக்க அவர் இவ்வளவு நேரம் காத்திருந்தார் என்பது குழப்பமான விடயம்.
நினைவகம் நன்றாக சேவை செய்தால், அவரும் அப்போதைய விளையாட்டு அமைச்சராக இருந்தார். ” என கூறியுள்ளார்.
மஹேல ஜயவர்தன பதிவிட்டதாவது "மூலைகளைச் சுற்றியுள்ள தேர்தல்கள் - சர்க்கஸ் தொடங்கியதைப் போன்றது. இதற்கான சான்றுகள் எவை? என்றும் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments