* இலங்கையில் இன்றைய நாளில் இரவு10:30 நிலவரப்படி மேலும் 11 COVID19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

  > இன்று அடையாளம்        காணப்பட்ட 8பேர் கடற்படை முகாமில் இருந்த வீரர்களாவர்.

  > அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் குருநாகல் மாவட்டத்தில் இருந்து  பதிவாகியுள்ளனர்.
(குருநாகல் மாவட்டத்தில் இருந்து இதுவரை 21 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்)

* மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 630 ஆக உயர்வடைந்துள்ளது.

* கடந்த 24 மணித்தியாலங்களில் 2 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

* 136 தொற்றாளர்கள் இதுவரை குணம்பெற்றுள்ளனர்.

* தொடர்ந்து சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் 487 பேர்.

* அவசர சிகிச்சை பிரிவில் ஒரு நோயாளியும் சிகிச்சை பெறவில்லை.

* மேலும் 317 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கண்காணிப்பில் உள்ளார்கள்.

* இதுவரை 7 கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன.

               1st 100 Patients - 57 days
               2nd 100 Patients - 19 days
               3rd 100 Patients - 9 days
               ️4th 100 Patients - 4 days
               ️5th 100 Patients - 2 days
               6th 100 Patients - 2 days

மேலதிக தகவல்கள் :
1] நேற்றைய தினம் மாத்திரம் 1,400கும் மேற்பட்ட PCR சோதனைகள் நடத்தபட்டுள்ளன.

2] இதுவரை 16,000கும் மேற்பட்டோர் PCR மூலம் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

3] கொழும்பு மாவட்டத்தில் 150கும் மேற்பட்ட நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

4] மொத்தம் 226 கடற்படை வீரர்கள் இதுவரை கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
  > அவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் & 79 பேர் விடுமுறையில் இருந்தவர்கள்.
  > கோவிட் 19 உடன் அனுமதிக்கப்பட்ட கடற்படை வீரர்களில் பெரும்பாலானோர் கோவிட் அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை" என்று கடற்படை மருத்துவர்  தெரிவித்துள்ளார்.

5] கடற்படையினர் மத்தியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளங்காணும் நடவடிக்கை இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளதாக டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

6] ஹோமாகம ஆதார வைத்தியசாலை இன்று முதல் Covid -19இற்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலையாக பிரகடனம்.

7] அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பு

8] நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான மருத்துவமனை ஐ.டி.எச்(IDH) கொழும்பு இப்போது நோயாளிகளால் நிரம்பியுள்ளது.

9] ஊரடங்கு சட்டத்தை மீறிய 41,500கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யபட்டுள்ளனர்.

10] 11,000கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளன.

11] நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 32 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தற்போது சுமார் 3600 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்

இலங்கை தரவுகள் LK
#630             #136                 #07            #487
Infected     Recovered      Deaths      In Active

உலக தரவுகள் 🌎
#3,178,568    #220,683      #970,027
Total Cases     Deaths        Recoverd