நேற்று (13) அடையாளம் காணப்பட்ட அனைத்து 26 புதிய கோவிட் 19 நோயாளிகளும் வெலிசரவில் உள்ள கடற்படை தளத்திலிருந்து பதிவாகியுள்ளதாக ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதனுடன் 480 கடற்படை பணியாளர்கள் இதுவரை COVID-19 நோயாளர்களாக பதிவாகியுள்ளனர்.
அவர்களில் 121 கடற்படை பணியாளர்கள் குணம்பெற்று வெளியேற்றப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த COVID-19 நோய்த்தொற்றுகள் புதன்கிழமை (13) 900 ஐத் தாண்டின.
இன்று காலை 10 மணி நிலவரப்படி உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 915 ஆக உள்ளது. அவர்களில் கிட்டதட்ட 50% பேர் இப்போது குணமடைந்துள்ளனர்.



0 Comments