கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.

ஏனைய மாவட்டங்களில் இன்று சனிக்கிழமை வரை இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையான ஊரடங்கு சட்ட நடைமுறை அமுலில் இருக்கும்.

அத்துடன் நாளை 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஊரடங்கு உள்ள நேரத்தில் ஊரடங்கை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டங்கள் விதிக்கபடும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் 18ம் திகதி திங்கள் அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும்.