கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தவும், சாதாரண வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கவும் அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் இப்போது ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அரசாங்கம் படிப்படியாக ஊரடங்கு உத்தரவை தளர்த்தத் தொடங்கியுள்ளது.
  1. ஆரம்பத்தில், அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் செயல்படத் தொடங்கும்.
  2. ரயில்கள் மற்றும் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  3. பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் மறுஅறிவித்தல் வரை மூடியே இருக்கும்.
  4. பொது உறுப்பினர்களிடையே PCR மாதிரி சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
  5. தனிமைப்படுத்தல் மையங்கள் திறந்து வைக்கப்படும்.
  6. இயல்புநிலையை மீட்டெடுக்கத் தொடங்கிய பிறகும், சில பகுதிகளை தனிமைப்படுத்தி முடக்கவும், போலீஸ் ஊரடங்கு உத்தரவுகளை விதிக்கவும் கூட தேவைப்படலாம்.