நாடளாவிய ரீதியில் இன்று(மே6) இரவு 8 மணி தொடக்கம் மே 11ஆம் திகதி காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தபடும்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுலிலுள்ள போதிலும், மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவனங்களின் மீள் செயற்பாடுகள் எதிர்வரும் 11 ஆம் திகதி படிபடியாக ஆரம்பமாகும்.

இதேவேளை, தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் நடைமுறை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா தொற்று அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பிரவேசிக்கவோ அல்லது வெளிசெல்லவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.