கட்டார் நாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாளை (26) அழைத்து வரவிருந்த விமானம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விமானத்தில் 273 இலங்கையர்கள் நாளை காலை கட்டாரிலிருந்து வரவிருந்தனர்.

ஜனாதிபதியின் கூடுதல் செயலாளர் அட்மிரல் (ஓய்வு) ஜெயநாத் கொலம்பகே ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது, குவைத் மற்றும் கட்டாரிலிருந்து வரும் விமானங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன, அண்மையில் திரும்பி வந்த சிலருக்கு கோவிட்19 தொற்று அடையாளம் காணபட்டமையாலே இவ்வாறான முடிவு எடுக்கபட்டுள்ளது.

கடந்த வாரம் குவைத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட கிட்டத்தட்ட 100 நோயாளிகள் இப்போது கோவிட் 19 நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கட்டார் சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, மே 19 ஆம் திகதி வரை கட்டாரில் 1051 இலங்கையர்கள் நாட்டிற்கு வர ஒப்பந்தம் செய்திருந்தனர்.