கொரோனா தொற்றுநோயை பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் எமிரேட்ஸ் துபாயிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு COVID-19 உள்ளதா என பயணிகளைச் சோதிக்க தொடங்கி உள்ளது.

துனிசியாவிற்கு புதன்கிழமை விமானத்தில் பயணித்தவர்கள் துபாயிலிருந்து புறப்படுவதற்கு முன்பு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று விமான நிறுவனம் அனுப்பிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் 10 நிமிடங்களில் கிடைத்தன.