உலகளவில் தற்போதைய தொற்றுநோய் (கோவிட் - 19) நிலைமை காரணமாக 2020 ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த இலங்கையின் தென்னாப்பிரிக்கா தேசிய அணி சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டு
உள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவிக்க விரும்புகிறது.

இலங்கை கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா இருவரும் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.

சுற்றுப்பயணம் மறுபரிசீலனை செய்யப்படும், இயல்புநிலை திரும்பியதும், இரு நாடுகளின் சர்வதேச கிரிக்கெட் நாட்காட்டிகள் மறுசீரமைப்பிற்கு பின்னர் அறிவிக்கபடும்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா 03 போட்டிகள் ஒருநாள் தொடர் மற்றும் 03 போட்டி டி 20i தொடர்களை விளையாட திட்டமிட்டிருந்தன.