கொழும்பு உள்ளிட்ட அதிஅபாய பகுதிகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை (27) அதிகாலை 5 மணி முதல் நீக்கப்படும் என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்குப் பின்னர் நாட்டில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு இருக்காது என அறிக்கையில் கூறபட்டுள்ளது.

மேலும் அறிவிப்பு வரும் வரை கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம் மாவட்டங்களுக்கு உள்ளே நுழைவதும் வெளியேயும் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது.