பொதுத்தேர்தல் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

மேலும் எதிர்வரும் மே மாதம் 28 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்தும் யோசனைக்கு தான் உடன்பட போவதில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் திணைக்களத்தின் தலைவர் மஹிந்த தேசபிரிய பொதுத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவிக்க தேர்தல் திணைக்களத்திற்கு அதிகாரம் உள்ளது என தனது Facebook பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.