அதிக ஆபத்துள்ள மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று (24) இரவு 8 மணி முதல் திங்கள் (27) அதிகாலை 5.00 மணி வரை மீண்டும் நடைமுறைபடுத்தபடும்.

ஏப்ரல் 20 முதல் ஒவ்வொரு நாளும் காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படாது.

எனவே இன்று இரவு 8 மணி முதல் 27 திங்கள் அதிகாலை 5 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவின் கீழ் இருக்கும்.

அதிக ஆபத்து இல்லாத இடங்களில் 27ம் திகதி காலை ஊரடங்கு உத்தரவு மீண்டும் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.