#Covid-19#Corona Virus#United States of America#Donald Trump

அமெரிக்க வரலாற்றில் முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் இயல்புபாதைக்கு கொண்டுவர அதிபர் டொனால்ட் 3 கட்ட செயல் திட்டங்களை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நியூயோர்க், கலிபோர்னியா உள்ளிட்ட 9 மாநிலங்களில்தான் கொரோனா வைரஸின் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாக இருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் தொடர்ந்து முடங்கி இருப்பது, மக்கள் வீட்டுக்குள் இருப்பது ஆகியவை குறித்து ஆலோசித்த அதிபர் ட்ரம்ப் பொருளாதாரத்தை இயல்பு பாதைக்கு திரும்பவைக்கும் 3 கட்ட செயல்திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பில் 18 பக்கங்கள் கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டிருக்கிறது. அது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“நம்முடைய அடுத்த போர் என்பது, அமெரிக்காவை மீண்டும் பொருளாதாரப் பாதைக்கு கொண்டு செல்வதுதான். அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் இந்த மாதத்திலேயே தங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாகத் தெரிவித்தன. அமெரிக்கா முழுவதும் மீண்டும் திறக்கப்பட வேண்டும், அமெரிக்க மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். நீண்ட காலத்துக்கு மாநிலங்கள் முடக்கபட்டு வைத்திருப்பதால் எந்த பயனும் இல்லை.