• மேலும் 4 தொற்றாளர்கள் நேற்றிரவு கண்டுபிடித்ததை தொடர்ந்து 65 புதிய கோவிட் நோயாளிகள் நேற்று(27) பதிவாகியுள்ளனர், 
  • இதை அடுத்து இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகியுள்ளது.

அறிக்கையின் படி கிட்டதட்ட சகல நோயாளிகளும் கடற்படையை சேர்ந்தவர்களாவர்.

63 நோயாளிகள் அன்றைய(26) தினம் அறிக்கை செய்யபட்டனர், கடந்த 2 நாட்களில் இலங்கை 128 நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளது.

மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சையில் உள்ள கோவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை 455. மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் 588 ஆக உயர்வடைந்துள்ளனர்.