322 வது COVID-19 நோயாளி வெலிசர கடற்படை முகாமில் இணைக்கப்பட்ட மாலுமியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று முன்னதாக பொலன்னறுவை பொது மருத்துவமனையில் கண்டறியப்பட்டார்.

அவர் பொலன்னறுவையைச் சேர்ந்தவர், பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி இவர் ஆவார்.

ஊடக அறிக்கையின் படி கடற்படை மாலுமி வெலிசர கடற்படை முகாமுடன் இணைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் பணியாற்றியுள்ளார்.

அவர் 18 ஆம் திகதி வீடு திரும்பியிருந்தார் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை பொலன்னறுவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

பொலன்னறுவையில் உள்ள லங்காபுர பிரிவில் உள்ள 12 கிராமங்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக பி.எச்.ஐ ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இன்று அடையாளம் காணப்பட்ட 323 வது நோயாளி ஜா-எல பகுதியிலிருந்து வருகிறார். கோவிட் 19 க்கு கண்டறியப்பட்டபோது அவர் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்தார்.